வேலூர் மக்களவை தொகுதியில்,எந்த வாக்குறுதியை அளித்து திமுக மக்களிடம் வாக்கு கேட்கும் – கோவையில் முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும்,எம்.எல்.ஏ-வுமான பி.ஆர்.ஜி அருண்குமாரின் தந்தை கடந்த 10 ஆம் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.அவரது குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதலை தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

 

விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ” வேலூர் தேர்தல் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து கடத்திக்கொண்டு போவதுபோல் மக்களுக்கு வாக்குறுதி மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று விட்டார்கள் திமுக. இப்போது என்ன வாக்குறுதி கொடுப்பார்கள்.

 

வேலூர் மக்களவை தொகுதியில்,எந்த வாக்குறுதியை அளித்து திமுக மக்களிடம் வாக்கு கேட்கும் என கேள்வி எழுப்பினார்.மேலும்,மத்தியிலிம்,மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத போது எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.நடிகர்கள் கல்விக் கொள்கை குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் அதை வைத்து அவர்கள் பேசுகிறார்கள்.

 

அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. துறை சார்ந்த அமைச்சர்கள் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்து அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.மேலும்,அதிகாரிகள் நேரடியாக சென்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனை குழு அமைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வசதியும்,குடி தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.பேருந்தில் பக்தர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும்,NIA சட்டம் சரியாக உள்ளது மக்களை காப்பாற்றுவதற்காக தான் சட்டம் மக்களை காப்பாற்ற இந்த அரசு இந்த சட்டத்தை ஆதரிக்கும்.டிக்-டாக் செயலியை தடை செய்தால் நல்லது. டீன் ஏஜ் அவர்கள் தெரியாமல் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது.இதனால் மற்றவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.அதை தவிர்ப்பது நல்லது என தெரிவித்தார்.

 

பின்னர்,கோவை மாநகர மாவட்ட செயலாளரும்,எம்.எல்.ஏ-வுமான பி.ஆர்.ஜி அருண்குமார் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முதல்வர் மறைந்த கோவிந்தராஜிலு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அப்போது,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Leave a Reply