ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி திர்ப்பை தெரிவித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்தனர்

Publish by: மகேந்திரன் --- Photo :


ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும்,காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்தனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும்,காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் இராமநாதபுரம் அண்ணா நகர், சந்தன மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்பஅணி துணை அமைப்பாளர் KJ.பிரவின் தலைமையில் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி காவிரி பாசன பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரும் பேரழிவிற்கு எதிரான பேரியக்க போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சாந்தகுமார், தர்மதுரை, ரமேஸ், சஞ்சய், ஆகாஸ், கரம் அறக்கட்டளை நிர்வாகிகள் சாதிக், பிரபு, நரேஷ், நிதிஷ்,விக்கி மற்றும் மகளிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Leave a Reply