திருப்பூரில் 8 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபம்!

திருப்பூர் மாவட்டம் காங்கயம், குட்டப்பாளையம் கிழக்கை சேர்ந்தவர் ஏசான். கூலி தொழிலாளி. இவரது மகள் கலைவாணி, வயது 8. அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.சரியாக வாய் பேச முடியாமல் இருந்துள்ள சிறுமி நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். பகல், 2:00 மணியளவில் வீட்டில் இருந்த சிறுமி மாயமானார்.

 

காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். சேமலைவலசுக்கு அருகில் உள்ள விவசாயி பழனிசாமி என்பவர், நேற்று காலை தோட்டத்து கிணற்றில் சிறுமியின் உடல் மிதப்பதை பார்த்தார். தகவலின் பேரில், காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். இறந்த சிறுமி கலைவாணி என்பது தெரிய வந்தது. வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றில் சிறுமி தவறி விழுந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Leave a Reply