ஜீவ ஜோதியை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கர்நாடகா மாநிலம், துங்கபத்ரை ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் எனும் ஜீவ ஜோதியை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கர்நாடக மாநிலம் ஆனேகுந்தியில் உள்ள நவ பிருந்தாவனம் கோவிலில் ஸ்ரீ வியாசாராஜரின் மூல பிருந்தாவனம் நேற்றிரவு சில மர்ம நபர்களால் முற்றிலும் இடிக்கப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோவை மாத்வ மகா சபை மற்றும் ஸ்ரீராகவேந்தர பக்தர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சலீவன் வீதியில் உள்ள கோவை நகரின் முதல் மந்த்ராலயமான ராகவேந்திரா ஆலயத்தின் முன்பாக நடைபெற்ற இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு,கர்நாடகா மாநிலம், துங்கபத்ரை ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் எனும் ஜீவ ஜோதியை இடித்த கயவர்களை உடனடியாக மத்திய மாநில அரசுகள் கைது செய்ய வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.


Leave a Reply