ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே தமது அடுத்த இலக்கு – சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 4 வது இடம் பிடித்த கோவையை சேர்ந்த மாணவி அபிநயா.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே தமது அடுத்த இலக்கு என ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 4 வது இடம் பிடித்த கோவையை சேர்ந்த மாணவி அபிநயா தெரிவித்துள்ளார்.

 

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி அபிநயா ரகுபதி.சிறுவயதில் இருந்தே ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் மாவட்ட,மாநில தேசிய அளவில் 100 க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்று சாதனை படித்துள்ளார்.

 

அண்மையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்த இவர்,கடந்த 4 ந்தேதி ஸ்பயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி 4 வது இடம் பிடித்தார்.

 

இந்நிலையில் இன்று கோவை விமானநிலையம் வந்த அவருக்கு அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அவருக்கு மாலை அணிவித்து இனிப்புகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி அபிநயா ,ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தாம் ‘ரோலர் ஸ்கேட்டிங்’ பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற ஆரம்பத்தில் எனது பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறிய அவர்,பின்னர் அவர்களின் சம்மதத்துடன் முறையான பயிற்சி பெற்றதாக தெரிவித்தார்.

 

உலகம் முழுவதும் இருந்து 91 நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் டெர்பி பிரிவில் தமிழக அளவில் வென்ற முதல் மாணவி என்பதில் தாம் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.தொடர்ந்து அவர் இந்திய அணி சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதே தமது இலட்சியம் என நம்பிக்கை தெரிவித்தார்.


Leave a Reply