சென்னையில் உள்ள சரவணா ஸ்டோரில் ஜி.எஸ்.டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை

சென்னை, தி.நகர் மற்றும் பாடியில் உள்ள சரவணா ஸ்டோரில் ஜி.எஸ்.டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை, தி.நகர் மற்றும் பாடியில் சரவணா ஸ்டோர் உள்ளிட்ட 5 இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் ஜி.எஸ்.டி. புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

 

காலை தொடங்கிய சோதனை தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.தி.நகர், சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடைக்கு 30-க்கும் மேற்பட்ட கார்களில் சென்ற வருமான வரித்துறையினர், தங்களை திருமண கோஷ்டி என்று அறிமுகம் செய்துகொண்டு, பட்டுப் புடவை செக்சன் எங்கே இருக்கிறது என்று கேட்டு, முதல் தளத்தில் பர்ச்சேஸை ஆரம்பித்துள்ளனர்.

மற்ற அதிகாரிகளெல்லாம் இதர தளங்களில் ‘அசெம்பிள்’ ஆன பிறகு தான், உண்மை விவரத்தைக் கூறி, அங்கிருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு, சோதனையைத் தொடர்ந்துள்ளனர். சோதனை நடந்த 6 நாட்களிலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடும் சோதனைக்குப் பிறகே தங்களின் விடுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகமே உணவு உள்ளிட்ட இதர வசதிகளைச் செய்து கொடுத்தது.


Leave a Reply