குற்றத்தடுப்பிற்கான விழிப்புணர்வு அறிவுரைகள்!

1. இரவு நேரத்தில் குடியிருப்பைச் சுற்றி உள்ள வேலிப்புறத்தில் நல்ல வெளிச்சமுள்ள மின்விளக்குங்கள் அமைக்கப்பட வேண்டும்.

 

2. வீட்டின் கதவு முன்பு இருபுற தாழ்ப்பாள் (Latched Lock) கொண்டதாக இருக்க வேண்டும். கிரில் கதவு கூடுதலாக இருந்தால் மிகவும் நல்லது.

 

3. கதவில் பாதுகாப்புச் சங்கிலி (Safefty chain) பொருத்த வேண்டும்.

 

4. கதவில் கண்டிப்பாக உள்ளிருந்து வெளியே பார்க்கும் வகையிலான லென்சு பொருத்தப்பட வேண்டும்.

 

5. பூட்டிய வீட்டினுள் அத்துமீறி எவராவது நுழைந்தால் எச்சரிக்கும் வகையில் அலாரம் பொருத்துவது நல்லதாகும்.

 

6. அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்புக்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

 

7. குடியிருப்பில் தேவைப்படக்கூடிய அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி பொருத்தப்பட வேண்டும்.

 

8. வேலைக்காரர்கள் விவரங்கள் பற்றியும், அவர்கள் முன்பு வேலை செய்த இடத்தில் நடந்து கொண்ட விதம் பற்றியும் விசாரித்து வைப்பது சிறந்தது. அவர்களது புகைப்படத்தை சேகரித்து வைத்தல் நல்லது.

 

9. கேஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், பால், செய்திதாள் இவற்றை கொண்டுவரும் நபர்கள் மீது சரியானபடியான கவனம் செலுத்த வேண்டும். அவர்களைப்பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

 

10. வீட்டைப் பூட்டி வெளியூர் செல்ல நேர்ந்தால், காவல் நிலையத்திலும், பக்கத்து வீட்டாருக்கும் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும்.

 

11. அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களை பார்க்க வருபவர்களுக்கு பார்வையாளர் குறிப்பேடு (Visitors Register) பராமறிக்க வேண்டும்.

12. பகலில் ஏ.சி பழுத பார்க்க மற்ற மின்சாதங்கள் பழுது பார்க்க மெக்கானிக் வரும் சமயத்தில் ஆண்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

 

13. நகைகளுக்கு பாலீஷ் போடுவதாகக் கூறிக்கொண்டு வரும் நபர்களிடம், நகையைக் கொடுக்க வேண்டாம். அவர்கள் பாலீஷ் போடுவதாக கொண்டுவரும் அமிலம் நகையைக் கரைக்கக்கூடியது.

 

14. வீட்டு சாவியை எக்காரணத்திற்கொண்டும் வீட்டின் அருகில் வைத்துவிட்டு செல்லக்கூடாது.

 

15. வீட்டு சாவியை வேலைக்காரர்கள் வசம் கொடுத்துவிட்டு செல்லக்கூடாது.

 

16. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் அறிமுகமில்லாத நபர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை வீட்டினுள் அனுமதிப்பதை தவிர்க்கவும்.

 

17. பெண்கள் வெளியில் செல்லும் போது, நகைகள் வெளியே அதிகபடியாக தெரியாமல் அணிந்து செல்வது நல்லது.

 

18. வீட்டிலுள்ள விலை மதிப்பு மிக்க நகை பணம் இவற்றை கூடுமானவரை வங்கி லாக்கரில் வைப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

 

19. வெளியில் செல்லும் போது, குறிப்பாக வங்கிக்கு செல்லும் போது, நகை, பணம் ஆகியவற்றை எடுத்துச் செல்லும்போது, கீழே பணம் இருப்பதாகவோ உங்கள் மீது அசிங்கம் பட்டுள்ளதாகவோ, உங்கள் மீது அரிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல் அல்லது இலையை தடவிவிட்டு அல்லது மற்ற ஏதாவது ஒரு வகையில் உங்கள் கவனத்தை திசை திருப்பி உங்கள் மதிப்பு மிக்க பொருட்களை திருட முயற்சிக்கலாம், எனவே விழிப்பாக இருங்கள்.

 

20. முதியவர்கள் ஏ.டி.எம்.இல் அல்லது வங்கியில் பணம் எடுக்க செல்லும்போது, கூடுதலாக ஒரு நபரை உடன் அழைத்து செல்ல வேண்டும்.

21. உங்கள் பணம் அல்லது நகை வைத்திருக்கும் பையை எப்போதும் பத்திரமாக கையோடு கொண்டு செல்லவும். காரினுள் வைத்து பூட்டிச்செல்லுதல், இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டி, பெட்ரோல் டாங்க் கவர், சீட்டின் அடியில் உள்ள காலியிடம் ஆகிய இடங்களில் வைத்து செல்வதை தவிர்க்கவும்.

22. இருசக்கர வாகனம் உபயோகிப்போர், கூடுதலாக பூட்டு ஒன்றினால் வாகனத்தை பூட்ட வேண்டும்.

23. பேருந்து மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும்போது தன்னைப்பற்றியோ தன் இருப்பிடம் பற்றிய விபரங்களை வெளிநபர்கள் தெரிந்துகொள்ளும்படி பேசக்கூடாது.

அனைவரும் தங்கள் இடத்திற்கான காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர்களின் கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு அவசியம் ஏற்படும் போது அழையுங்கள்.


Leave a Reply