முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை! 7 பேர் கைது

Publish by: --- Photo :


திருச்சியில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சபரிகிரி வாசன் (21).

 

இவர் அப்பகுதியிலுள்ள அஜந்தா மெஸ் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு பணிமுடிந்து வீட்டுக்கு சென்ற அவரை வழிமறித்த மர்ம கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சபரிகிரி சம்பவ இடத்திலேயே துடிதடித்து உயிரிழந்தார்.

 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சபரிகிரிவாசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தாக கூறப்படுகிறது. எனவே , கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், சரவணன், விஜயன், வினோத் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply