கோவை சாய்பாபா குருபூர்ணிமா விழா

கோவையில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்று குருபூர்ணிமா மகோத்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசித்தனர்.ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.

இந்த விசேஷ நாளை முன்னிட்டு உலகமெங்கும் உள்ள கோவில் மற்றும் திருத்தலங்களில் குரு பூர்ணிமா திருவிழா நடைபெறுவது வழக்கம்.இதன் படி கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் வெகு விமரிசையாக குருபூர்ணிமா திருவிழா நடைபெற்றது.

 

விழாவையொட்டி காலை 10.30 மணிக்கு குருபூர்ணிமா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு குருபூர்ணிமா விழாவில், பசும்பால், மலர்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களுடன் வந்து பக்தர்கள் வழிபட்டு சீரடி சாய் பாபாவின் அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் பாலசுப்ரமணியின் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபாவை தரிசித்தனர்.


Leave a Reply