சூரியனில் கரும்புள்ளி உள்ள அதிர்ச்சியூட்டும் புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பகிர்ந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் நமது பால் கண்டத்தின் சூரியனையும், சர்வதேச விண்வெளி நிலையம் இரண்டையும் ஒரே படத்தில் படம்பிடித்துள்ளது.

 

புகைப்படக் கலைஞர் ரெய்னி கோலாகுர்சியோ.ஜூலை 15 அன்று புகைப்படக் கலைஞர் ரெய்னி கோலாகுர்சியோ என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.சூரியனுக்கு முன்னால் ஐ.எஸ்.எஸ் நிலையம் ஒரு சிறிய கருப்பு புள்ளி போல இருப்பது இந்த புகைப்படத்தின் சிறப்பு.

 

சூரியனுக்குத் திருஷ்டி,நம்பமுடியாத இந்த புகைப்படம், நாசாவின் பெஸ்ட் போட்டோ ஆப் தி டே பிரிவின் கீழ் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சூரியனுக்குத் திருஷ்டி வைத்தார் போலச் சர்வதேச விண்வெளி நிலையம் புகைப்படத்தில் இருப்பதாக அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை விளக்கிய விண்வெளி நிறுவனம், இந்த புகைப்படத்தில் இரண்டு சிறப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. சிறப்பு என்னவென்றால் இரண்டு புகைப்படங்களை இந்த படம் ஒன்றிணைகிறது. ஒரே படத்தில் சூரியன் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் இருக்கிறது.

 

விண்வெளியில் நாடாகும் இதுபோன்ற விசித்திரமான அழகிய புகைப்படங்களுக்கு மக்களிடம் எப்பொழுதுமே ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது. நெட்டிசன்ஸ்கள் கேலியாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.


Leave a Reply