பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா

கோவையில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழாவானது இன்று நடைபெற்றது.கோவை பீளமேடு பகுதியில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியானது இங்கு அமைந்துள்ளது.இந்த கல்லூரியில் வருடந்தோறும் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அதே போல், இந்த வருடமும் முப்பெரும் விழாவாக பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழா,21வது ஆண்டு பட்டமளிப்பு விழா, மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒன்றிணைதல் விழா நடைபெற்றது.

இதில் 84 இளநிலை மற்றும் 7முதுநிலை பட்டதாரிகளுக்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் பட்டங்களை வழங்கினர் .இதை தொடர்ந்து படிப்பில் சிறந்து விளங்கிய மாணவிக்கு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பங்களிப்பில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு பதங்கங்கள் வழங்கபட்டது.விழாவில் ரேமினஸ் 19 என்ற இதழை வெளியிட்டனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் பி எஸ் ஜி கல்லூரியின் முதல்வர் ஜெயசுதா,அப்பலலோ கல்லூரி முதல்வர் லதாவெங்கடேஷ், துபாய் என் எம் சி மருத்துவமனை இயக்குனர் சியாமளா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply