தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் விவேக், இவர் சென்னை சாலிகிராமத்தில் தனது தாயார் மணியம்மாளுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் மாரடைப்பு காரணமாக விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று அதிகாலை காலமானார். மணியம்மாளுக்கு தற்போது வயது 84 ஆகிறது. மணியம்மாளின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் விவேக்கின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இரவு அவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.விவேக்கின் தாயாரின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.