பாம்பும் மனிதனும் மாறி மாறி கடித்ததில் இரு உயிரும் பலி

குஜராத்தில் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்த முதியவர் உயிரிழக்க, பாம்பும் இறந்துவிட்டது. குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா (60). முதியவரான இவர் நேற்று சோளங்களை ஏற்றிக்கொண்டிருக்கும் லாரி ஒன்றில் அருகே நின்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று திடீரென பார்வத்தின் கை மற்றும் முகத்தில் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் பதிலுக்கு கோபத்துடன் பாம்பை கடித்துள்ளார். இதில் பாம்பு இறந்துவிட்டது.

கடித்த பாம்பு விஷத் தன்மை கொண்டது என்பதால் அங்கிருந்தவர்கள் பார்வத்தை லுனவாடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு சிகிச்சை பெற்ற அவர், விஷத் தன்மையினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply