தமிழகத்தின் இளைஞர் மலேஷியா மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மனமேல்குடி என்று கூறும் காணொளி சமூக வலைதளங்களில் நெஞ்சை பதற வைக்கிறது !!!

இந்தியாவில் மட்டுமன்றி தமிழகத்திலும் வறுமையின் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி செல்லும் நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது இந்நிலையில் பலர் வறுமையின் பிடியில் இருந்து மீண்டும் உள்ளனர்.ஆனால் பலர் பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.மேலும் தற்போது ஒரு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நெஞ்சை பதறும் வெளியாகியுள்ளன.

 

இந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தமிழகத்தில் உள்ள மனமேல்குடி என்றும் தந்தை பெயர் அருளாந்து என்றும் அவர் கிராமங்களில் கொட்டகை போடும் (தென்னங்கீற்று ஓழை) வேலை செய்வதாக கூறி வருகிறார்.மேலும் தனது உறவினர்கள் புத்துவயல் கிராமத்தில் இருப்பதாக கூறுகிறார்.

வெளிநாடு சென்று உள்ள இளைஞர்கள் மூலம் இந்தியா மற்றும் தமிழகம் மட்டுமின்றி இந்த நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் கஷ்டத்தினை போக்கிட இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருவது மனவேதனை அளிப்பதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Leave a Reply