மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி !போலீசார் விசாரணை

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வச்சினம்பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையம் அருகே கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 17 பேர் குழுவாக இன்று மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் இறங்கி உற்சாகமாக இளைஞர்கள் அனைவரும் குளித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இது தெரியாமல் இளைஞர்கள் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், மேலும் நீரோட்டம் அதிகரித்தது.

இந்த திடீர் வெள்ளத்தில் குளித்து கொண்டிருந்த கோவை சோமனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (19), கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (19) ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். உடன் இருந்த இளைஞர்கள் காப்பற்ற முயன்ற போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில்மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில் புதிய பம்ப் ஹவுஸ் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த தொழிலாளர்கள் கயிறு மூலம் ஒருவர் பின் ஒருவராக காப்பாற்றினார்கள்.இருவரை தவிர மற்ற 17 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி தேடிய நிலையில் கோடீஸ்வரன் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. பிரசாத் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது.ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிறுமுகை போலீசார் உயிரிழந்த கோடீஸ்வரன் மற்றும் பிரசாந்த் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Leave a Reply