கொலையில் முடிந்த வாக்குவாதம்….! நடந்தது என்ன?

Publish by: --- Photo :


மதுரையில் சாலையில் நடந்து செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதியவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 9 ஆம் தேதி மதுரை திருநகரை சேர்ந்த கணேசன் என்னும் முதியவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். அவரது நண்பரை வண்டியூரில் உள்ள சிவன் என்பவரை பார்ப்பதற்காக மதுரை சாலை பகுதிக்கு வந்தார்.அவர் நண்பருக்காக காத்திருந்த போது அவ்வழியே நடந்து சென்ற மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் இவர் மீது மோதி இருக்கிறார்.

 

அப்போது அந்த இளைஞரை பார்த்து தம்பி கவனமாக செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அந்த காரணத்திற்காக அந்த இளைஞர் வாக்குவாதம் செய்து உள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள டீ கடைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆத்திரம் அடங்காத அந்த இளைஞரை அங்கு கீழே இருந்த கல்லை எடுத்து, அந்த முதியவர் எதிர்பாராத நேரத்தில் நின்று கொண்டிருந்த முதியவரின் பின் தலையில் அவர் தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவரை மீண்டும் மீண்டும் தன் கையில் வைத்திருந்த கையால் தாக்கிவிட்டார்.மேலும் அருகில் இருந்தவர்களையும் எச்சரித்து சென்று இருக்கிறார்.

 

அருகில் இருந்தவர்கள் யாரும் அதை தட்டி கேட்க முன் வரவில்லை. இது ஒரு மனிதாபிமானம் அற்ற செயலாக உள்ளது. மீட்கப்பட்ட முதியவர் அவர் குடும்பத்தினரின் உதவியுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். இது அடிதடி வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டு மதுரை காமராஜர் புரத்தை சேர்ந்த இளைஞரான சுப்ரமணி என்பவரை காவல் துறையினர் கைது செய்து தற்போது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி இருக்கின்றனர்.


Leave a Reply