150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

Publish by: --- Photo :


கோவையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற அம்மன் திருவீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.கோவை,சுந்தராபுரம் மாச்சாம்பாளையம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் மற்றும் கோபாலகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.மாங்கல்ய பாக்கிய வழிபாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சக்திகள் கொண்ட இக்கோயிலின் வருடாந்திர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் தாரை தப்பட்டைகள், வானவேடிக்கைகளுடன் அருள்மிகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா மிக சிறப்பாக புறப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கு பக்தர்கள் தேங்காய் ,பழத்துடன் சுவாமி வருகையை முன்னிட்டு காத்திருந்தனர் .பின்னர் வரிசையாக நின்ற படி பெண்கள் கும்மி பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து சுவாமி மாரியம்மனுக்கு தேங்காய் பழம் வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில் சுந்தராபுரம்,குறிச்சி,குணியமுத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மருதாசலம் ,சுப்ரமணி,கந்தசாமி,சண்முகம்,செந்தில் உட்பட கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Leave a Reply