எச்‌ஐ‌வியால் பாதிக்கப்பட்ட மாணவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு

பெரம்பலூர் அருகே எச்‌ஐ‌வி யால் பாதிக்கப்பட்ட மாணவனை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் வட்டம் அருகே கொளக்காநத்தம் கிராமத்தில் வசித்த லாரி ஓட்டுநர் ஒருவரும், அவருடைய மனைவியும் எச்‌ஐ‌வி நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். அவர்களது மகனும் எச்‌ஐ‌வி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளான்.

 

உறவினர்கள் ஆதரவோடு பெரம்பலூர் அரசுபள்ளியில் படித்து வந்த அவருக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு சேர முடிவு செய்து உள்ளனர். ஆனால் அவருக்கு எச்‌ஐ‌வி இருப்பதாக கூறி பள்ளியில் சேர்க்க மறுத்து உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரும், அவரதுஉறவினர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Leave a Reply