தயிருக்கு ஜி‌எஸ்‌டி வாங்கிய உணவகம்

பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே அன்னபூர்ணா என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர் மஹாராஜன் என்பவர் பார்சலாக 40 ரூபாய் கொடுத்து தயிர் வாங்கினார். அப்போது தயிர் 40 ரூபாய் என்றாலும், அதை பார்சல் செய்ய 2 ரூபாயும், அந்த தயிருக்கு ஜி‌எஸ்‌டி வரியாக மேலும் 2 ரூபாயும் சேர்த்து மொத்தம் 44 ரூபாயை உணவக நிர்வாகம் பில்லை கொடுத்து வசூலித்து உள்ளது. தயிர், பால், காய்கறி போன்றவற்றிற்கு ஜி‌எஸ்‌டி வரி கிடையாது என வாடிக்கையாளர் கேட்டும், அதையும் மீறி உணவகம் அவரிடம் தொகையை கட்டாயப்படுத்தி வசூலித்தது. இதனால் மனம் நொந்த மஹாராஜன் இது பற்றி நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு தாக்கல் செய்தார்.

 

இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் நீதிபதி தயிருக்கு ஜி‌எஸ்‌டி வரி வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக உணவகமானது தனது நுகர்வோருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவிற்கு 5,000 ரூபாய் மற்றும் தயிருக்காக வசூல் செய்யப்பட்ட 44 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 15,044 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தவறும் பட்சத்தில் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Leave a Reply