அமைச்சர் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்திய தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் அணை உடைந்ததற்கு நண்டுளின் மீது பழி போட்டு தப்ப முயன்ற அமைச்சரின் வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நண்டுகளை விட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. ரத்தினகிரி திவாரி அணை உடைந்ததில் இதுவரை 20 பேரின் சடலம் மீட்க்கப்பட்டு உள்ளது. காணாமல் போன மேலும் பலரின் சடலங்களை தேடும் பணி நடக்கிறது. அணை உடைவதற்கு நண்டுகளே காரணம் என வினோத கருத்தை தெரிவித்து இருந்த அம்மாநில நீர்வள பாதுகாப்பு துறை அமைச்சர் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அந்த அமைச்சரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த நண்டுகளை அமைச்சர் வீட்டில் அவிழ்த்துவிட்டனர்.


Leave a Reply