கைதிகள் தயார் செய்யும் பொருட்கள் பிரிசன் பஜார் மூலம் விற்பனை

தமிழ்நாட்டு சிறைகளில் உள்ள பிரிசன் பஜார் மூலம் கைதிகளால் தயார் செய்யப்பட்ட பொருட்கள் 239 கோடிக்கு விற்கப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி, சண்முகம் தெரிவித்து உள்ளார். சட்ட பேரவையில் சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளதாகவும், சிறைகளில் உள்ள காலி பணியிடங்கள், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். சிறைகளில் செல் ஃபோன் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அதிநவீன செல் போன்களை செயல் இழக்க செய்யும் கருவி விரைவில் பொருத்தப்படும் என்றார். முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் இதுவரை 1,627 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

 

புழல் சிறையில் உள்ள இட நெருக்கடியை களைய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டு சிறைகளில் உள்ள பிரிசன் பஜார் மூலம் கைதிகளால் தயார் செய்யப்பட்ட 239 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டபட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். சிறைச்சாலை வளாகங்களில் திறக்கப்பட்டுள்ள 5 பெட்ரோல் பங்குகளின் மூலம் 87 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்து உள்ளார்.


Leave a Reply