மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப்பள்ளி ஆசிரியர்

சேலத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டான். சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பளியில் வேதியியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்து வந்தவன். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி. இவன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவியை வேதியியல் ஆய்வுக் கூடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கற்பம் ஆகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

 

இது தொடர்பாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து போலீசார், தலைமறைவாக இருந்த பாலாஜியை கைது செய்தனர். நேற்று கைது செய்யபட்ட அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலாஜியை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.


Leave a Reply