வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த கோரி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் நடைபெற்ற இதில்,பள்ளர் , குடும்பர் , பண்ணாடி , காலாடி , தேவேந்திர குலத்தார் , வாதிரியார் ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வழங்க வேண்டும் .

சாதிவாரி அடிப்படையில் மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தி தேவேந்திர குல வேளாளர்களுக்கு 20 % தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து விடுவித்து MBC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பினர்.


Leave a Reply