இந்தியாவிலேயே உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு மருத்துவ பணியாளர் வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 584 மருத்துவ அலுவலகர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.பிறகு பேசிய முதல்வர் இந்தியாவிலேயே சுகாதாராத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என கூறினார்.
மேலும், பச்சிளங்குழந்தையின் இறப்பு விகிதமும், பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதமும் கணிசமாக குறைக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மருத்துவ அலுவலகர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி. அன்பழகன், ராமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.