சிட்லப்பாக்கம் ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு: முதல்வர் பழனிசாமி

சென்னை சிட்லம்பாக்க ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்து உள்ளார். சட்ட பேரவையில் மாநில கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக உணவு மற்றும் பாதுகாப்பு துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகள் சார்ந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் தஞ்சாவூரில் நவீன அரிசி ஆலை 25 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும் என கூறினார்.143 கூட்டுறவு நிறுவனங்கள் 24 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும் என்றும், 5 கோடி ரூபாய் செலவில் நியாயவிலைக்கடைகளில் 582 அம்மா சிறப்பு அங்காடிகள் தொடங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


Leave a Reply