91 வயது முதியவரை,ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட நபர்

லண்டனில் 91 வயது முதியவரை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. லண்டன் நகரில் பரபரப்பாக இயங்கி வரும் மார்பெல் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதியவர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்டார். அதில் 91 வயதான அந்த முதியவர் பலத்த காயமடைந்த நிலையில் , இது தொடர்பான சி‌சி‌டி‌வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் மற்றொரு ரயில் நிலையத்திலும், அந்த நபர் இளைஞர் ஒருவரை தள்ளி விட முயன்றது தெரிய வந்தது. இதனால் 2 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யபட்ட நிலையில் தற்போது அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறையில் அடைக்க தகுதியானவர் என கருதப்படும் வரை அவர் முன்பு சிகிச்சை பெற்ற மனநல மருத்துவமனையில் நாட்களை கழிப்பார் என கூறப்பட்டுள்ளது.


Leave a Reply