இயக்குனர் பா.ரஞ்சித் மீதான கைது தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பா.ரஞ்சித் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இம்மனு நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது ஜூன் 21 ஆம் தேதி வரை இயக்குனர் பா.ரஞ்சித் கைது செய்யபட மாட்டார் என தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் தம்மை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க கோரி பா.ரஞ்சித் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இயக்குனர் பா ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தார்.


Leave a Reply