அரசு வேலை வாங்கி தருவதாக 18க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் மோசடி

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் வடக்கு பகுதியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் ஓட்டுனராக வேலை பார்க்கும் இவர், தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறி சுந்தரவேல் என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

இதே போல வெங்கமேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரும் தனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வெங்கமேடு போலீசில் புகார் அளித்தனர். இவ்விரு சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 18 க்கும் மேற்பட்டவரிடம் லட்சக் கணக்கில் ஏமாற்றியதும், அந்த பணத்தில் சொகுசு வீடு கட்டி வருவதோடு, சொகுசு கார்களில் உலா வந்ததும் தெரிந்தது.


Leave a Reply