போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு : நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் ஆட்சியரிடம் புகார்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை சிம்மக்கல்லில் நடைபெற்ற சோதனையின் போது நிற்காமல் சென்றதால் போலீசார் லத்தியை வீசி தாக்கியதால் விவேகானந்த குமார் உயிரிழந்துவிட்டார், என்பது குற்றச்சாட்டு.

 

அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்தவரின் உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். விவேகானந்தகுமார் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் கோட்டாட்சியர் சாந்தகுமாரிடம் மனு அளித்துள்ளனர்.


Leave a Reply