நடிகர் சங்க தேர்தலில் என் வாக்கு விஷாலுக்கு இல்லை- வரலட்சுமி ட்வீட்

நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கு நடிகர் விஷாலுக்கு இல்லை என அவரது தோழியும், நடிகையுமாகிய வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

இதற்கென அனைத்து அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகை வரலட்சுமி பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும்  விஷாலுக்கு ட்விட்டரில் கடிதம்  ஒன்று  எழுதியுள்ளார்.  அதில் சாதனைகளை  விளக்கி தேர்தல் பிரச்சார வீடியோ வெயிடுவதற்கு பதில் தனது தந்தையை இழிவுபடுத்தும் வீடியோவை விஷால் வெளியிட்டு விஷால் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

 

இதன் மூலம் தான் அவர் மீது வைத்திருந்த மரியாதையை விஷால் இழந்துவிட்டதாக குறிப்பிட்டார். ஏதேனும் வகுப்பில் கலந்து சற்று முதிர்ச்சி பெரும்படி விஷாலை அறிவுறுத்தியிருந்தார்.மேலும் திரைக்கு வெளியேயும் விஷால் நல்ல நடிகர் என்பதை நிரூபித்துவிட்டதாக குறிப்பிட்ட அவர் , விஷாலுடனான தனது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் , நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை விஷால் இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply