பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞன்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞனை கைது செய்ய கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலுரை அடுத்துள்ள பொட்டியபுரம் ஏரியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பெண் ஒருவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ஒதுக்குபுறமான இடத்திற்கு சென்றுள்ளார்.

 

அங்கு மறைந்து இருந்த பூமணி என்ற இளைஞன் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்று உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு பூமணி தப்பிச் சென்றுள்ளான். அவனை கைது செய்யக்கோரி பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.


Leave a Reply