பிரதமர் மோடி திறந்து வைத்த பாலத்தில் 3 மாதங்களில் விரிசல்!

குமரி நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் மோடி திறந்து வைத்த பாலத்தில் 3 மாதங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நரிக்குளம் பாலத்தின் மேல் போடப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 

சாலையின் ஒரு புறம் மண் சரிவும் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். பாலத்தை முறையாக சரிசெய்து மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.குமரி நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நரிக்குளம் என்ற இடத்தில் குளத்தின் மேல் பாலம்  அமைக்கப்பட்டது.

 

இதை பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களுக்கு முன் திறந்து வைத்தார். பிரதமர் வருகைக்காக பாலம் அவசரஅவசரமாக மண்ணை நிரப்பி அதிகாரிகள் பாலம் போட்டது அம்பலமாகியுள்ளது.


Leave a Reply