ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினர் போலீசாரால் கைது .!

விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.130 சதுரகிலோமீட்டர் வரை ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு எதிராக போராடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொது மக்களும் தங்களது எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

 

நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் தலைமையில் தான் இந்த கூட்டம் நடைபெற்றது. எனவே அங்கு 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி ஆர்பாட்டம் செய்ததாக கூறி 3 பெண்கள் உட்பட 63 பேரை கைதுசெய்துள்ளனர்.


Leave a Reply