கட்சி விவகாரங்களை பொது வழியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை!

கட்சி விவகாரங்களை பொது வழியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் , தொண்டர்களை அதிமுக தலைமை எச்சரித்து இருக்கிறது. அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

அதில் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மட்டுமே கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி கருத்து தெரிவுக்க உரிமை பெற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. தலைமை கழகத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மற்றவர்கள் யாரும் பத்திரிக்கைகளிலோ அல்லது ஊடகங்களிலோ தங்கள் கருத்துகளை அதிமுகவின் கருத்துக்கள் என்று சுட்டிக்காட்ட கூடாது. இதனை மீறி கருத்து தெரிவிக்க முனைபவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply