கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை சோலிங்கநல்லூரை அடுத்த எழில் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரவணன் என்ற நபரையும், அவனது கள்ளக்காதலி மஞ்சுளாவையும் கைது செய்தனர்.அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கைதான சரவணன் நமது கோட்டை என்ற பெயரில் போலி பத்திரிக்கை அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொண்டு பலரிடம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


Leave a Reply