திருவாடானை அருகே மின்கம்பம் முறிந்து சேதம்! காவு வாங்க காத்திருக்கும் மின்சார வாரியம்!!

திருவாடானை அருகே மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து, அதிகாரிகள் சரி செய்வதில் காலதாமதம், கிராம மக்கள் பேராட்டம் நடத்த முடிவுராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் இருந்து தொண்டிக்கு, ஆதியூர், அரும்பூர், திருவெற்றியூர், கள்ளிக்குடி மார்க்கமாக உயர்மின்அழுத்த மின்சாரம் செல்கிறது. இந்த மின்கம்பங்கள் பல வருடமாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்த நிலையில் இப்பகுதி முன்னாள் கவுன்சிலர் நாகநாதன் மாவட்ட அதிகாரி வரை புகார் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

 

மேலும் இப்படி மோசமாக இருந்ததால் எப்பொழுது விழும் என்ற அச்சத்தில் நிலத்தின் உரிமையாளர் சுப்பிரமணி கடந்த 3 வருடமாக விவசாயம் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்று கிழமை இரவு அடித்த பலத்த காற்றில் இந்த மின்கம்பம் முறிந்து விழுந்துவிட்டது. இது குறித்து மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் திங்கள் கிழமை மதியம் வரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

 

இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை. மேலும் திருவாடானை பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் எலும்புக் கூடாக எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கமடை கிராமத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் 5 மாடுகள் ஒரு நாய் சம்பவ இடத்திலேயே பலியாகின.இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மின்சார வாரியத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார்கள். அதற்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைத்தார்கள்.


Leave a Reply