தொண்டியில் பைக் ரேஸ் விபத்தில் இரு இளைஞர் உயிரிழப்பு!

Publish by: ஆனந்த் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் இளைஞர் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2ம் தேதி இரவு தொண்டியில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றுள்ளனர் அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

 

இளைஞர்கள் திருவாடானை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தொண்டி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ரபீக் மகன் முகம்மது யாசின் (20) மற்றும் நாகூர்கனி மகன் முகம்மது ஷேக் அப்துல்லா (19). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெருமானேந்தல் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த முகம்மது ஷேக் அப்துல்லாவின் இரு சக்கர வாகனம், முகம்மது யாசின் வாகனத்தின் மீது மோதியது.

 

இதில், கட்டுப்பாட்டை இழந்த முகம்மது யாசின் சாலையோர மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த இளைஞரின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர் இதில் பலத்த காயமடைந்த முகம்மது ஷேக் அப்துல்லாவும் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் இந்நிலையில் இன்று இளைஞர் சேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தொண்டியில் தினமும் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் என்றும் தொடர்ந்து வருவதால் போலீசார் வாகனத்தனிக்கையில் மேலும் தீவிரம் காட்டவேண்டும் என்பதே ஊர்மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Leave a Reply