கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு! அடுத்த தலைமை செயலாளர் யார்?

Publish by: --- Photo :


தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதை ஒட்டி அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமை செயலாளராக பொறுப்பேற்ற கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.

 

இதனால் புதிய தலைமை செயலாளரை தேடும் பணி தொடர்ந்துள்ளது. அந்த வகையில் மூத்த ஐ‌ஏ‌ஏ‌எஸ் அதிகாரியான ,ஆளுநரின் செயலாளர் ராஜ கோபால், நில நிர்வாகத்துறை ஆணையர் , ஜி‌.எஸ்.டி. கவுன்சில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வரும் ராஜித் ரஞ்சன், தற்போதைய நிதி துறை செயலாளர் கே. சண்முகம், உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டின் ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளனர்.

 

எனினும் இதில் ராஜ கோபால் மற்றும் ராஜித் ரஞ்சன் ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் மற்றவர்கள் ஓராண்டுக்கும் குறைவான அளவிலேயே பணிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.அதே வேளையில் பதவி நீட்டிப்புக்கு கிரிஜா வைத்தியநாதன் விரும்பவில்லை.


Leave a Reply