காலில் காயம் ஏற்பட்டதால் தலையில் ஹெல்மெட் அணியவில்லை! இளைஞர் ‘லடாய்’..

காலில் காயம் ஏற்பட்டதால் தலையில் ஹெல்மெட் அணியவில்லை என கூறி வாக்குவாத்தில் ஈடுபட்ட இளைஞரை போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். சென்னை ராயபுரம் சூரிய நாராயண தெருவில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்த காவலர்கள் ஹெல்மெட் அணியாயதற்கு அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த அவர் தனக்கு காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவசரமாக வீட்டிற்கு செல்வதால் ஹெல்மெட் அணியவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த விசாரணையில் அந்த நபர் ராயபுரத்தை சேர்ந்த லட்சுமன் என்பதும் அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்கவே அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமணனின் வாகன ஆவணத்தை சரிபார்த்த காவலர்கள் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.


Leave a Reply