ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல், மைதானங்களில் சிறப்பு தொழுகை!

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பெரிய பள்ளி வாசல் சார்பில் மலையம்பாகத்தில் உள்ள ஈகா திடலில் பெண்கள் உட்பட ஏராளாமானோர் சிறப்பு  தொழுகையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கொருவர் தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டனர். இது போல கடலூர் விருத்தாசலம் பகுதியில் உள்ள நவாப் ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளி வாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

புதுப்பட்டினம்,கல்பாக்கம் நகரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றன.இதில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். நாமக்கலில் பூங்கா சாலை,கவிஞர் ராமலிங்கரரின் திடல் மற்றும் சேலம் சாலை ,ஈக்தா மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தபட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியில் தமிழ்நாடு தௌகித் ஜமாத் அமைப்பினர் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில்  ரமலான் சிறப்பு  தொழுகை  நடைபெற்றது.

 

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை,குலச்சல் வட்டார பகுதிகளில் 22 இடங்களில் பள்ளிவாசல்களிலும் மைதானங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.


Leave a Reply