நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அது சார்ந்த புள்ளி விவரத்தையும் தேசிய தேர்வு முகமை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன்படி நீட் தேர்வு 2019 தமிழகத்தின் உடைய தேர்ச்சி விகிதம் என்பது 48.57 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டில் 39.56 ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்தாண்டு கிட்டதட்ட 9.5% அதிகரித்திருக்கிறது.

 

ஒட்டு மொத்தமாக இருக்க கூடிய தேர்ச்சி விகிதம் என்பது, நாடு முழுவதும் இருக்க கூடிய தேர்ச்சி விகிதம் அதே நிலையில் தான் இருக்கிறது. 56.5% பேர் தகுதி பெற்று இருக்கின்றனர்.கடந்த ஆண்டு தகுதி பெற்றவர்களின் விகிதம் என்பது 56.27 ஆக இருக்கிறது. மொத்தமாக தமிழகத்திலிருந்து இந்த தேர்விற்க்கு பதிவு செய்து இருப்பவர்களின் எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்து முப்பத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஏழு பேர்.இதில் தேர்வை எழுதியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்து மூன்றாயிரத்து எழுபத்தி எட்டு பேர். இந்த தேர்வை பொருத்த வரையில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஒன்பதாயிரத்து எழுநூற்று என்பத்து ஐந்து. மொத்தமாக 48.57% தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

தேசிய அளவில் முதல் 50 தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்களுடைய பட்டியலும் வழங்கபட்டிருக்கிறது. இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நழின் என்ற மாணவர் 99.9 % அதாவது 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.இரண்டாவது இடத்தை இரண்டு மாணவர்கள் பெற்று இருக்கின்றனர். அவர்கள் டெல்லி,உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்.

 

வெளியிடப்பட்டிருக்கும் தேர்வு முடிவின் அடிப்படையில்அதிகபட்சமான தேர்ச்சி விகிதம் பெற்ற மாநிலமாக டெல்லி இருக்கிறது. 74.92% மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்று இருக்கின்றனர்.டெல்லி கடந்த ஆண்டு அதிகம் தேர்ச்சி பெற்ற மாநிலங்களில் இரண்டாவது இடத்தை பெற்றது. இந்த ஆண்டு டெல்லி முதல் மாநிலமாக உயர்ந்து இருக்கிறது. இந்த முறை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யாரும் அந்த 50 பேர் கொண்ட தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை.


Leave a Reply