தமிழகத்தில் வாகை சூடியுள்ளது திமுக… கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வேலூர் தவிர, தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி புதிய சாதனை படைத்துள்ளது.

 

இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் வாகை சூடியுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில் ,ஒன்பது இடங்களை அதிமுக வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் திமுக அமோக வெற்றி தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


Leave a Reply