சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.32 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதால் அதற்கென கூடுதல் கூடுதல் பாதுகாப்பிற்கென மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடி மையங்களுக்கு துணை ராணுவப்படையினர் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் முடித்த கையோடு இன்று காலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னையை சேர்ந்த அமல்ராஜ்-கருமத்தம்பட்டியை சேர்ந்த சிந்தியா ஜோடி இன்று மாலை தம்பதி சமேதராய் மணப்பெண் கோலத்தில் வந்து கருமத்தம்பட்டியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் தனக்கான வாக்கினை பதிவு செய்தார் சிந்தியா.சென்னையில் திருமணம் முடித்து இன்று காலையில் வரவேற்பு முடித்த கையோடு, புது திருமண தம்பதி மணக்கோலத்தில் வந்து வாக்களித்தது அடடா என்ன ஒரு கடமை உணா்ச்சி என அனைவராலும் பாராட்ட வைத்தது.