உங்கள் வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்க! இல்லாவிட்டால் இந்த விபரீதம் நடக்கலாம்!!

வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் உடனே அதை அப்டேட் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக, வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வாட்ஸ் அப் செயலி உலகளவில் பிரபலமானது; குறிப்பால் இந்தியாவில் அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகம். படங்கள், வீடியோ பகிர்தல், ஆவணங்கள் அனுப்புதல், வீடியோ காலிங் என்று, பயனாளர்களின் விருப்பங்களுக்கேற்ப பலப்பல வசதிகள் அறிமுகமாகி வருகின்றன.

 

வாட்ஸ் அப் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்ற நிலை தான். காலை வணக்கம், அலுவலக தகவல் பரிமாற்றம், ஆவணங்கள் பகிர்தல், குடும்ப குழுக்கள், நண்பர்கள் குழு, செய்திக்குழுக்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் என்று, எல்லா மட்டத்திலும் வாட்ஸ் அப் சேவை இன்றியமையாததாக உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், தனது பயனாளர்களின் பாதுகாப்பு கருதி, அவ்வப்போது பல அம்சங்களை சேர்த்து, அந்த செயலியை புதுப்பிக்க அறிவுறுத்துகிறது.

 

 

இந்த சூழலில், வாட்ஸ் அப் வாயிலாக ஊடுருவ ஹேக்கர்கள் எனப்படும் செயலியை முடக்குபவர்கள் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பிட்ட பயனாளர்களின் வாட்ஸ் அப் கணக்கை முடக்கும் நோக்கில் அவர்கள், இவ்வாறு ஊடுருவி இருப்பதாக தெரிகிறது.

 

தங்களது இலக்கு என்று கருதப்படும் நபரை, தங்களில் போனில் இருந்து அழைத்தாலே போதும்; எதிரில் பேசுபவரின் வாட்ஸ் அப் கணக்கை கண்காணிக்கும் செயலி, அழைப்பவரின் போனில் பதிவிறக்கம் ஆகிவிடும். அதன் பின் அவரது வாட்ஸ் அப் கணக்கு, ஹேக்கர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிடும்.

 

எனவே, இதில் இருந்து தப்ப, செயலில்யில் புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் சேர்த்துள்ளது. அதை பெறுவதற்கு, தற்போதுள்ள செயலியை உடனே பயனாளர்கள் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று, வாட்ஸ் அப் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.


Leave a Reply