இந்து மக்கள் கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை

இந்து மக்கள் கட்சி சார்பில், தொண்டியில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில், இந்து மக்கள் கட்சி சார்பில் 1008 குத்துவிளக்குப் பூஜை, தொண்டி அருள்மிகு சிவகாமி அம்மாள் உடனாய சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.

 

இந்த விளக்கு பூஜையை, இந்து மக்கள் கட்சியில் மாநில செயலாளர் அர்ஜுன் சம்பத் மற்றும் மதுரை பாம்பாட்டி சித்தர் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Leave a Reply