பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது வென்றவருமான தோப்பில் முகம்மது மீரான் காலமானார்; அவருக்கு வயது 75.
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான தோப்பில் முகம்மது மீரான், கடந்த 1944 செப்டம்பர் 26ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினத்தில் பிறந்தார். இவர் துறைமுகம், ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு, குடியேற்றம் உள்ளிட்ட புதினங்கள், 6 சிறுகதைகள், பல மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நெல்லையில் காலமானார்.
‘
அவரது உடல், நெல்லை வீரபாகு நகரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படும் என்று, குடும்பத்தினர் தெரிவித்தனர்.