வண்டி வண்டியா வெச்சிருக்கேன்.. வாங்கி கட்டிக்காதே! சூலூர் பிரசாரத்தில் ஸ்டாலினுக்கு சீமான் சூடு!!

Publish by: --- Photo :


“திமுகவை ஒழித்துவிட்டு தான் செல்வேன்; வண்டி வண்டியா வெச்சிருக்கேன். வாங்கி கட்டிக்காதே!” சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார்.

 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து, நேற்றிரவு நடந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

 

இந்திய மொழிகளிலே தொன்மையான மொழி தமிழ். அதுதான் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். என்னிடம் 40 எம்பிக்களை கொடுங்கள்; தமிழை ஆட்சி மொழியாக்கி காட்டுகிறேன். தகுதியை வைத்து விட்டு வர வேண்டும். நாங்கள் மனிதநேயவாதிகள் அல்ல; உயிர்ம நேயவாதிகள். நாங்கள் சாகடிக்கப்படலாம்; ஆனால், தோற்கடிக்கப்பட மாட்டோம்.

 

பிரசார மேடையில் அமராமல் தொண்டர்கள் வரிசையில் அமர்ந்த சீமான், அங்கு குழந்தையின் செல்பிக்கு போஸ் கொடுத்தார்.

 

இனிமேலும் நாங்கள் ஏமாற்றவுமில்லை.ஏமாற்றுபவர்களை விடப்போவதுமில்லை.மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு, எங்களது வளர்ச்சியை கண்டு பல பேர் தற்கொலை செய்வார்கள் . சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழின மக்களை கொல்லப்பட்டதை சகித்துக்கொண்டவர்கள் திமுகவும்,காங்கிரசும் . தேர்தலுக்காக கரும்பு காட்டிற்குள் ரோட்டைப் போட்டு சென்றவர். அருந்ததியினர் வீட்டில் தேனீர் அருந்துகிறீர்கள்.

 

திமுக பற்றி பேச, வண்டி வண்டியா வச்சிருக்கேன். அதையெல்லாம் இறக்கி விட்டால் அசிங்கமாயிடும். வாய் குடுத்து எதையாவது ஸ்டாலின் வாங்கி கட்டிக்காதே. பொங்கலூர் பழனிச்சாமி சட்டசபைக்கு போனால், வெளிநடப்பு தான் செய்வார்.

 

பெரம்பலூரில் நடந்த பெண்கள் பாலியல் கொடுமை வழக்கில் அயோக்கியர்களை காப்பாற்ற முயலுகிறார்கள். இதை சும்மா விட மாட்டேன். எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் அடிமைகள். யாரோடும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பது தாங்கள் தான். இனிவரும் சட்டசபை தேர்தலிலும் தனித்தே நிற்போம். அதிலும், 50% பெண்களுக்கு தான் ஒதுக்கப்படும். எங்கள் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.


Leave a Reply