வரும் 07.05.2019செவ்வாய்க்கிழமை அட்ஷய திருதியை நாளாகும்.நாம், அன்றைய நாளில் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். இதனால் தான் பலரும் தங்கம் வெள்ளி போன்றவற்றை வைத்து பூஜிப்பது, அவற்றை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகிறோம்.
தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. தங்கத்தை வாங்குவதற்கு பதில் உப்பு வாங்கினாலும் கூட, தங்கம் வாங்கிய பலனை பெறலாம் என்று, `பவிஷ்யோத்தர-புராணம்‘ நூல் குறிப்பிடுகிறது. அட்சய திருதியை நாளின் மகத்தைவத்தை பார்ப்போம்.
வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும், இந்த நாளில் தான். கங்கை, பூமியை முதல் முதலில் தொட்டது. இத்தினத்தன்று தான். அட்சய திருதியை நாளில் தான் பெற்றாள். அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி, இவ்வுலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர். அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார். விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினாலே, தங்கம் வாங்குவதற்குரிய பலன்களை பெறலாம்.
மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
மகாலட்சுமியின் அருள் பெற, அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே செல்வம் தானாக தேடி வரும்.