தோல்வி பயத்தால் ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.

 

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

 

ஆளும் ஆட்சியாளர்கள் மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மக்களின் மனநிலையினை புரிந்து கொள்ளாமல், வளர்ச்சித்திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துகின்றனர். வழக்குகளை போட்டு மக்களுக்கு கிடைக்க கூடிய வாழ்வாதாரத்தை தடுக்கின்றனர். அதுவே அவர்களின் தோல்விக்கு அடித்தளமாக அமையும்.

 

தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேசக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 38 மக்களவை தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதி மற்றும் நடைபெற உள்ள 4 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியும் ,மத்தியில் பா.ஜ.க கூட்டணியும் வெற்றி பெறும் என்று வாசன் கூறினார்.


Leave a Reply