மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் தாக்குதல் ! பாதுகாப்புபடை வீரர்கள் 16 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

 

கட்சிரோலி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனத்தை குறி வைத்து நக்சலைட்டுகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

 

இதில், வாகனத்தில் சென்றவர்களில் 16 வீரர்கள் உடல் சிதறி பலியானதாக, முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை மன்னிக்க மாட்டோம் என்று கூறியுள்ள அவர், உயிரிழந்த 16 வீரர்களின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Leave a Reply